sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜி.டி.நாயுடுவுக்கு பிரம்மாண்ட சிலை கோவை தொழில்துறையினர் வரவேற்பு

/

ஜி.டி.நாயுடுவுக்கு பிரம்மாண்ட சிலை கோவை தொழில்துறையினர் வரவேற்பு

ஜி.டி.நாயுடுவுக்கு பிரம்மாண்ட சிலை கோவை தொழில்துறையினர் வரவேற்பு

ஜி.டி.நாயுடுவுக்கு பிரம்மாண்ட சிலை கோவை தொழில்துறையினர் வரவேற்பு


UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM

ADDED : ஜூன் 28, 2024 07:50 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM ADDED : ஜூன் 28, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
இந்தியாவின் எடிசன் என்றழைக்கப்படும், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் பிரம்மாண்ட சிலை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, கோவை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நந்தினி ரங்கசாமி, சி.ஐ.ஐ., தென் மண்டல தலைவர்:
ஜி.டி.நாயுடு, கோவையை சேர்ந்த முக்கிய தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், சிறந்த இன்ஜினியர். நம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு, அவர் பெரும் பங்களிப்பை வழங்கினார். பொறியியல் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கான கேந்திரமாக, கோவையை நிறுவுவதில் அவரது பங்களிப்பு பெரிது.

வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி அமைப்பு:
விவசாயம், வாகனம், விமானம் உள்ளிட்ட துறைகளில் முன்னோடியாக திகழ்ந்தார். அவர் பல நிறுவனங்களை நிறுவினார். கரும்பு சாறு பிழியும் இயந்திரம் முதல் டீசல் இன்ஜின்கள், ஜவுளி இயந்திரங்கள் வரை ஏராளமான இயந்திரங்களை கண்டறிந்தார். தொழில் துறை தவிர, கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு சிலை வைப்பது வரவேற்கத்தக்கது.

கார்த்திகேயன், தலைவர், கொடிசியா: கோவையை சர்வதேச அரங்கு வரை உயர்த்திய, விந்தை மனிதர் ஜி.டி.நாயுடு, எதையுமே தனது வித்தியாசமான பார்வையால் சிந்தித்து, புதுமையை கண்டறிந்தவர். கோவைக்கான அடையாளத்தை உருவாக்கியவர். சாதாரண கால்குலேட்டரிலிருந்து, பெரிய இயந்திரங்கள் வரை கண்டறிந்தவர்.
விவசாயத்தொழில்நுட்பத்திலும் கோலோச்சினார். ஆட்டோமொபைல் தொழில்துறையிலும், ஆங்கிலேயருக்கு இணையாக வாகனங்களை உருவாக்கினார். ஆழமான அறிவாற்றலால், ஏராளமான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்த மாமனிதர். அவருக்கு சிலை வைப்பதை வரவேற்கிறோம்.
1969ல் கொடிசியா உருவாக காரணமானவர். கொடிசியா அலுவலகம் 30 ஆண்டுகளாக வாடகையின்றி செயல்பட வழிவகை செய்தார். அதன் காரணமாகவே, தற்போதும் கொடிசியா கட்டடத்துக்கு ஜி.டி.நாயுடு டவர் என்ற பெயர் நிலைத்து நிற்கிறது.

அன்று துவங்கிய ஜி.டி,நாயுடுவின், யு.எம்.எஸ். பஸ் போக்குவரத்து, இன்றளவும் பெருநகரங்களுக்கு இடையேயும், டவுன்பஸ்களாக தொடர்கிறது. தமிழகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல, அன்றே தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுத்திய மாமனிதர். அவரை போற்றுவோம்; அவருக்கு சிலை நிறுவுவதை வரவேற்போம்.






      Dinamalar
      Follow us