UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 10:02 AM

கோவை :
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன, முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப்புக்கு, தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு விஞ்ஞானி விருது, புத்திர பிரதாப்புக்கு வழங்கப்பட்டது. பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில், ஆய்வு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டமைக்காக, சமூக அறிவியல் பிரிவில், இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழைக் கொண்டது.
கரும்பு, செம்மறியாடு, முயல் பண்ணை உள்ளிட்ட துறைகளில், புதுமையான கண்டுபிடிப்புகளை இவர் உருவாக்கியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் தலைவருமான பொன்முடி, விருது வழங்கி கவுரவித்தார்.
கவுன்சிலின் துணைத் தலைவர் பிரதீப் யாதவ், உறுப்பினர் செயலர் வின்சென்ட் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.