கனடாவில் வெயிட்டர் வேலைக்காக குவிந்த இந்திய மாணவர்கள்
கனடாவில் வெயிட்டர் வேலைக்காக குவிந்த இந்திய மாணவர்கள்
UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 09:43 PM
ஒட்டாவா:
கனடா ஹோட்டல் ஒன்றில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் காத்திருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளில் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் கனடா செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மாணவர்கள் படித்துக் கொண்டே, தங்களது செலவுக்காக பகுதி நேரமாக வேலைக்கு செல்கின்றனர்.
அந்த வகையில், கனடாவின் பிரம்ப்டன் நகரில் புதிதாக தந்தூரி உணவகத்தில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையறிந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டவர், ட்ரூடோவின் கனடாவில் அதிக வேலைவாய்ப்பின்மை? பெருங்கனவுடன் கனடா வரும் இந்திய மாணவர்கள் தங்களது முடிவை ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று தன் பதிவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ஏராளமான நெட்டிசன்கள் பல வகையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.