UPDATED : நவ 26, 2024 12:00 AM
ADDED : நவ 26, 2024 08:15 AM
கோவை:
வெள்ளக்கிணறு, எஸ்.என்.எஸ்., அகாடமி, வடிவமைப்புச் சிந்தனைகள் பாடத்திட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடமும், தேசிய அளவில் ஒன்பதாவது இடமும் பெற்று இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற விருதைப் பெற்றுள்ளது.
வடிவமைப்புச் சிந்தனைகள் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்து சிக்கல் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனைகள் மாணவர்களிடையே வளர்த்தல் போன்ற செயல்பாடுகளில் பள்ளியின் அர்ப்பணிப்பிற்காக டெல்லியில் நடந்த விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மாணவர்களை எதிர்காலத் தலைவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறையில் இந்த விருது, எஸ்.என்.எஸ்., அகாடமி பள்ளியின் வரலாற்றில் மீண்டும் ஒரு மணி மகுடமாக மிளிர்கிறது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.