பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
UPDATED : டிச 12, 2024 12:00 AM
ADDED : டிச 12, 2024 10:12 AM

உடுமலை:
பொதுத்தேர்வு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களை தயார் செய்வதற்கான பயிற்சி உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசுப்பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு, மாணவர்களை தயார்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
எஸ்.கே.பி., பள்ளி தலைமையாசிரியர் பூரணி துவக்கி வைத்தார். மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார் பயிற்சியை ஒருங்கிணைத்தார். பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சின்னராசு, பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.
மெல்லக் கற்கும் மாணவர்களை தேர்ச்சி பெற செய்வது, நுாறு சதவீத தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நேற்று தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி நடந்தது. தொடர்ந்து அறிவியல், ஆங்கிலம் பாடங்களுக்கான பயிற்சி நாளையும், கணித பாடத்துக்கான பயிற்சி வரும் 17ம் தேதியும் நடக்கிறது.
குடிமங்கலம், மடத்துக்குளம் மற்றும் உடுமலை வட்டார அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பத்தாம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.