UPDATED : டிச 17, 2024 12:00 AM
ADDED : டிச 17, 2024 09:12 AM

திருப்பூர்:
பிளஸ், 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 9 மற்றும் 10ம் தேதி தேர்வுகள் துவங்கியது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிக்கு, 12 முதல் தேர்வுகள் நடந்து வருகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளுக்கு நேற்று அரையாண்டுத்தேர்வு துவங்கியது;தமிழ் தேர்வு நேற்று நடந்தது.
வரும், 23ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது; வரும், 24 முதல், ஜன., 1ம் தேதி வரை, ஒன்பதுநாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது.
வரும், 21ல் பள்ளிசெயல்படுமா?
கனமழை பெய்ததால், கடந்த, 13ம் தேதி பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, மறுநாள் (14ம் தேதி) தனியார் பள்ளிகள் இயங்கின; அரசு பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில், கடந்த, 13ம் தேதி விடுமுறைக்கு மாற்றாக, வரும், 21ம் தேதி அரசு பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இது குறித்து விளக்கமான அறிவிப்பு தலைமை ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் அனுப்பப்படும் என்றனர்.