சென்னை ஐஐடியின் அதிநவீன ஆய்வகங்களை பார்வையிட வாய்ப்பு
சென்னை ஐஐடியின் அதிநவீன ஆய்வகங்களை பார்வையிட வாய்ப்பு
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 10:50 AM

சென்னை:
சென்னை ஐஐடி-ல் உள்ள அதிநவீன ஆய்வகங்களை பொதுமக்கள் ஜன.,3,4 தேதிகளில் பார்வையிட ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.
அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களும் புத்தாக்க ஆராய்ச்சி, ஆய்வுத்திட்டங்கள், செயல் விளக்கங்கள் ஆகியவற்றை 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் பார்வையிடலாம். நான்கு தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்களில் நடைபெற்று வரும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள், 90-க்கும் மேற்பட்ட ஆய்வங்களை பொதுமக்கள் நேரில் காணமுடியும்.
சென்னை ஐஐடி-ன் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா 2025 ஜனவரி 3ந்தேதி முதல் 7-ந் தேதி வரை வழக்கம் போல் நான்கு பகல்- நான்கு இரவுகளாக நடைபெற உள்ளது. சாஸ்த்ரா-வின் முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் திறந்தவெளி அரங்கை, இணையதளம் வாயிலாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவதுடன், 60,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்துப் பேசிய ஐஐடி சென்னை டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணன் என் கும்மாடி கூறுகையில், ஐஐடி சென்னை-க்கு எல்லோரும் வருவதற்கு இது ஒரு பிரத்யேக வாய்ப்பாக இருக்கும் என்றார்.
இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் டிச.,25. விருப்பமுள்ளவர்கள் shaastra.org/open-house இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.