UPDATED : ஏப் 05, 2025 12:00 AM
ADDED : ஏப் 05, 2025 10:32 AM

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர்-வழிகாட்டி நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை அள்ளினர்.
அசத்தல் தகவல்கள்
ஷானியா, மாணவி, ஒட்டன்சத்திரம்: பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு எழுதியுள்ளேன். குடும்பத்தில் நான் முதல் பட்டதாரியாக போகிறேன். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க முடிவு செய்துள்ளேன். எந்த கல்லுாரியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இக்கருத்தரங்கில் பங்கேற்றேன். தகவல்கள் அனைத்தும் அருமை. பொறியியல் கவுன்சிலிங் எப்படி இருக்கும் என்ற விவரம் தெரிந்தது. நிபுணர்கள் ஆலோசனை அருமை.
ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட், லேப்டாப் பரிசு வென்றவர்கள்
திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு சரியாக விடை எழுதி பரிசு பெற்றவர்கள்:காலை அமர்வு: திண்டுக்கல் ஸ்ரீபதி, பூர்ணிமா, முகமது ஜவாட் அக்தர் ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச், கிருஷ்ணராஜா டேப்லெட் ஆகியோர் பரிசு வென்றனர்.மாலை அமர்வு: திண்டுக்கல் ஸ்ரீநிதி, காவியா, தமிழரசி, ராம் கிேஷார், பழநி ஆகாஷ் ஆகியோர் ஸ்மார்ச் வாட்ச், திண்டுக்கல் சரண்குமார் டேப்லெட், வத்தலகுண்டு சுஜிதா லேப்டாப் பரிசுகள் வென்றனர்.இன்றும் (ஏப்.,5) இதுபோன்ற பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

