UPDATED : மே 14, 2025 12:00 AM
ADDED : மே 14, 2025 08:41 AM
புதுச்சேரி :
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பாடத்திட்டத்தின் (சி.பி.எஸ்.இ) கீழ் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், பிளஸ் 2ல் 90.39 சதவீதமும், 10ம் வகுப்பில் 88.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுச்சேரியில் முதல் முறையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றி நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 சதவீதம் தேர்ச்சியை எட்டிய பள்ளிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள் அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்ள சீரிய முறையில் வழிநடத்திய ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.