sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயார்: இஸ்ரோ

விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயார்: இஸ்ரோ

விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயார்: இஸ்ரோ


UPDATED : மே 22, 2025 12:00 AM

ADDED : மே 22, 2025 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2025 12:00 AM ADDED : மே 22, 2025 10:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்:
பிஎஸ்எல்வி-சி 61 /இஓஎஸ் -09 திட்டம் தோல்வி அடைந்தது தொடர்பாக தேசிய அளவிலான குழு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் நாராயணன், 2027ல் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு முழு வீச்சுடன் தயாராகி வருவதாக தெரிவித்தார்.

புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட் -1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் கட்நத 18 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியில் முடிந்தது.

இது தொடர்பாக புவனேஸ்வரில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பிஎஸ்எல்வி -சி 61 திட்டம், 3வது நிலையின் போது, சேம்பர் அழுத்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 4வது நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அது தோல்வியில் முடிந்தது. இதற்கான காரணம் குறித்து தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

2025 ம் ஆண்டு இன்னும் முக்கியமான ஆண்டு. சந்திரயான்-4, சந்திரயான்-5 உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. 2027 ல் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு இந்தியரை அனுப்பி வைக்கும் திட்டத்துடன், உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்காக இஸ்ரோ பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us