ஜங்கிள் பிரேம்ஸ் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி துவக்கம்
ஜங்கிள் பிரேம்ஸ் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி துவக்கம்
UPDATED : ஜூலை 03, 2025 12:00 AM
ADDED : ஜூலை 03, 2025 10:39 AM
பாலக்காடு:
பாலக்காடு அருகே, தனியார் மேல்நிலைப்பள்ளியில் வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி துவங்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒலவக்கோடு எம்.இ.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் எர்ணாகுளம் சமூக வனவியல் துறை சார்பில் ஜங்கிள் பிரேம்ஸ் என்ற தலைப்பில் வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கண்டு ரசித்தனர்.
பாலக்காடு சமூக வனவியல் துறை உதவி வனப்பாதுகாவலர் சுமுஸ்கரியா கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் லீலா, வனத்துறை புகைப்பட கலைஞர் நந்தன், பள்ளி தலைமை ஆசிரியை ஷைனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில், இயற்கை சூழ்ந்த காடுகளில் அழகு, வனவிலங்குகளின் நடமாட்டம், பாதுகாப்பது, விலங்குகள் கூட்டமாக இடம் விட்டு இடம் பெயர்வது, மலையடிவார கிராமப் பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது, சுற்றுலா பயணியரின் வாகனங்களை விரட்டுவது போன்று படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கேரளாவில் உள்ள அனைத்து வனங்களின் இருப்பிடங்கள், அங்கு செல்வதற்கான வழித்தடங்கள், வரைபடங்கள் ஆகியவை மாணவர்களுக்கு வனத்துறை காவலர்கள் தெரிவித்தனர்.