UPDATED : ஜூலை 11, 2025 12:00 AM
ADDED : ஜூலை 11, 2025 08:39 AM
சென்னை:
தமிழக அரசின் சார்பில், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உட்பட, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று, ஆதர வற்ற பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அரசு திட்டங்களுக்காக பயனாளிகளை சேர்ப்பதுடன் மட்டுமின்றி, அதை உறுதி செய்ய மாவட்ட அலுவலகத்தில் இருந்து மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஊழியர்கள் பேசுவதாக கூறி, ஓ.டி.பி., வந்திருக்கும்; அதை கூறுங்கள் என கேட்கின்றனர்.
ஓ.டி.பி., கேட்பதால், அவர்களை நம்புவதில் சிரமங்கள் உள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
பயனாளி கூறியதாவது:
தற்போது, நுாதன முறையில் மோசடிகள் பல நடப்பதால், மொபைல் போனில் பேசி, ஓ.டி.பி., கேட்பவர்கள் அரசு அதிகாரிகள் தானா என சந்தேகம் எழுகிறது. இந்த குழப்பங்களை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.