sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர் போராட்டம் எதிரொலி; மடகாஸ்கரில் பார்லி., கலைப்பு

/

மாணவர் போராட்டம் எதிரொலி; மடகாஸ்கரில் பார்லி., கலைப்பு

மாணவர் போராட்டம் எதிரொலி; மடகாஸ்கரில் பார்லி., கலைப்பு

மாணவர் போராட்டம் எதிரொலி; மடகாஸ்கரில் பார்லி., கலைப்பு


UPDATED : அக் 01, 2025 10:55 PM

ADDED : அக் 01, 2025 10:56 PM

Google News

UPDATED : அக் 01, 2025 10:55 PM ADDED : அக் 01, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்டனனரிவோ:
நேபாளத்தைப் போன்று மடகாஸ்கரிலும் இளைஞர்கள் தலைமையிலான போராட்டத்தால், அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தன் அரசை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு நாடான மடகாஸ்கர், ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு, 2009ல் நடந்த மக்கள் போராட்டங்களால் முன்னாள் அதிபர் மார்க் ரவலோமனானா பதவி விலகி, 'யங் மலகாசீஸ் டீட்டர்மைன்ட்' கட்சி தலைவரான ஆண்ட்ரி ரஜோலினா ஆட்சிக்கு வந்தார்.

இயற்கை எழில் கொஞ்சும் மடகாஸ்கரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக, 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர், ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் முதலில் தலைநகர் அன்டனனரிவோவில் தொடங்கின. பின்னர் நாடு முழுதும் பரவியது. பல்பொருள் அங்காடிகள், வங்கிகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனால் மாலை முதல் அதிகாலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்தப் போராட்டங்களின்போது, 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஐ.நா., தெரிவித்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தன் அரசின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

''அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒழுங்காக செய்யவில்லை. நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்,'' என்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us