sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விண்வெளி சென்ற அனுபவம் சுபான்ஷு சுக்லா பெருமிதம்

/

விண்வெளி சென்ற அனுபவம் சுபான்ஷு சுக்லா பெருமிதம்

விண்வெளி சென்ற அனுபவம் சுபான்ஷு சுக்லா பெருமிதம்

விண்வெளி சென்ற அனுபவம் சுபான்ஷு சுக்லா பெருமிதம்


UPDATED : நவ 21, 2025 08:06 AM

ADDED : நவ 21, 2025 08:08 AM

Google News

UPDATED : நவ 21, 2025 08:06 AM ADDED : நவ 21, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
''வானத்திற்கு எல்லை இல்லை,'' என, தன் விண்வெளி பயண அனுபவத்தை சுபான்ஷு சுக்லா பகிர்ந்து கொண்டார்.

பெங்களூரில் நடக்கும் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:

வானத்திற்கு ஒரு போதும் எல்லை இல்லை; வானம் எனக்கோ, உங்களுக்கோ, இந்தியாவுக்கோ சொந்தமானது இல்லை. ஆனால் வானத்தில் இருந்து இந்தியா எப்படி ஜொலிக்கிறது என்பதை பார்க்க முடியும்.

நமது எதிர்காலமும் அதை விட மிக பிரகாசமாக உள்ளது. வரும் 2047ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நம் இலக்கை அடைய போகிறோம். விண்வெளி துறையில் பல ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டுள்ளன. நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. விண்வெளி ஆராய்ச்சிக்கு தொழில்நுட்பம் உதவுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் விண்வெளி பயணத்திற்காக பயிற்சி பெற்று வருகிறேன். விண்வெளி பயணத்தின்போது, என் இதயத்தில் மோட்டார் சைக்கிள் வைக்கப்பட்டது போன்றும்; குட்டி யானை என் நெஞ்சில் அமர்ந்திருப்பது போன்றும் உணர்வு ஏற்பட்டது. ஆறு நாட்கள் அங்கு கழித்துவிட்டால் எல்லாம் பழகிவிடும்.

ஆனால் விண்வெளியில் இருந்து திரும்பும்போது நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். விண்வெளி சென்று திரும்பும்போது தலை பெரிதாக தெரிகிறது; இதய துடிப்பு குறைந்து விடுகிறது; பசி ஏற்படவில்லை.

விண்வெளி சென்று மூன்று நாட்கள் எனக்கு பசிக்கவே இல்லை. அங்கிருந்த 20 நாட்களில் 5 கிலோ உடல் எடை எனக்கு குறைந்தது. இந்த பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின், விண்வெளியில் இருந்து பெங்களூரு எப்படி ஜொலிக்கிறது என்பதை வீடியோ மூலம் விளக்கினார்.






      Dinamalar
      Follow us