UPDATED : ஜன 06, 2026 06:55 PM
ADDED : ஜன 06, 2026 06:55 PM
விழுப்புரம்:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடை பணியாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதி தேர்வு நாளை துவங்குகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
இங்கு பயிற்சி பெற்றதில், 31 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளர்.
தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு உடற்தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை 7ம் தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகி தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

