தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு சித்த மருத்துவ முகாம்; மாணவியருக்கு விழிப்புணர்வு

சிறப்பு சித்த மருத்துவ முகாம்; மாணவியருக்கு விழிப்புணர்வு

சிறப்பு சித்த மருத்துவ முகாம்; மாணவியருக்கு விழிப்புணர்வு


UPDATED : ஜன 06, 2026 06:58 PM

ADDED : ஜன 06, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2026 06:58 PM ADDED : ஜன 06, 2026 07:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை:
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, மாவட்ட சித்தா துறை சார்பில், சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது.

அகத்தியர் பிறந்ததினத்தையொட்டி, தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட சித்தா துறை சார்பில், சிறப்பு சித்த மருத்துவ முகாம், ராஜாவூர் ஹர்ட்புல்னஸ் மையத்தில் நடந்தது.

ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியருடன் இணைந்து, இம்முகாம் நடத்தப்பட்டது.

முகாமை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா மற்றும் ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கலைக்கல்லூரி முதல்வர் கற்பகவள்ளி துவக்கி வைத்தனர். சித்த மருத்துவம் சார்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவிய போட்டி நடத்தப்பட்டு, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சித்த மருத்துவர்கள் சிவக்குமார், ஸ்ரீபப்பி, சாலைகார்த்திகேயன், ராகவி, மருந்தாளுனர் முத்துலட்சுமி உள்ளடக்கிய குழுவினர், மக்களுக்கு சிகிச்சையளித்தனர். சித்த மருத்துவம் குறித்த புத்தக கண்காட்சியும் நடந்தது.

முகாம் ஏற்பாடுகளை, சித்த மருத்துவர் லட்சுமிபதிராஜ், சமூக ஆர்வலர் நெல்சன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us