UPDATED : ஜன 17, 2026 11:52 AM
ADDED : ஜன 17, 2026 11:53 AM
கள்ளக்குறிச்சி:
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாவேந்தர் இளைஞர் மன்றம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பிரவீனா வரவேற்றார். நிகழ்ச்சியில், விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
விவேகானந்தர் இளைஞர்களுக்காக பல்வேறு போதனைகளை தெரிவித்துள்ளார். அவரது போதனைகளை பின்பற்றி, சாதனை படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லுாரி டீன் அசோக், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விவேகானந்தர் தொடர்பாக பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.

