கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில் இளம் புதுமையாளர் கண்காட்சி
கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில் இளம் புதுமையாளர் கண்காட்சி
UPDATED : ஜன 22, 2026 10:42 AM
ADDED : ஜன 22, 2026 10:42 AM
கோவை:
கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி, ஆர்காம் நிறுவனத்துடன் இணைந்து உலக இளம் புதுமையாளர்கள் எக்ஸ்போ 4.0வை நடத்தியது. மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமையான சிந்தனைகள் மற்றும் நடைமுறைத் தீர்வுகளை வெளிப்படுத்தும் வலுவான தளமாக இது அமைந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்தும், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் 420 மாணவர்கள், 277 புதுமையான திட்டங்களை முன்வைத்தனர்.
ஐ.ஓ.டி., கோடிங் மற்றும் புரோகிராமிங், ஆட்டோமேஷன் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறை சார்ந்த திட்டங்களை மாணவர்கள் சமர்ப்பித்தனர்.
சிறந்த திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றியாளர்களுக்கு பாரதீய வித்யா பவன் தலைவர் நாகசுப்ரமணியம், இணைச் செயலாளர் சூரியநாராயணன் பரிசு வழங்கினர்.
கீதாஞ்சலி பள்ளிகளின் தலைவர் அழகிரிசாமி, கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கவிதா, ஆர்காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அருண்ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

