தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெள்ளியங்காடு பள்ளி மாணவன் வயலின் போட்டியில் முதலிடம்

வெள்ளியங்காடு பள்ளி மாணவன் வயலின் போட்டியில் முதலிடம்

வெள்ளியங்காடு பள்ளி மாணவன் வயலின் போட்டியில் முதலிடம்


UPDATED : பிப் 05, 2026 12:21 PM

ADDED : பிப் 05, 2026 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2026 12:21 PM ADDED : பிப் 05, 2026 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவன், பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வயிலின் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறையின் சார்பில், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வி ஆண்டிற்கான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கலந்து கொண்டனர்.

பள்ளியில் 9ம் வகுப்பில் படிக்கும் அன்பு என்ற மாணவன், வயலின் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். மாணவனுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில், பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டன. பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவனை, தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் மக்கள் பலரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us