தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாடுகளில் மடி நோய் கண்டறிவது எவ்வாறு? தோட்டக்கலைத்துறை மாணவிகள் செயல் விளக்கம்

மாடுகளில் மடி நோய் கண்டறிவது எவ்வாறு? தோட்டக்கலைத்துறை மாணவிகள் செயல் விளக்கம்

மாடுகளில் மடி நோய் கண்டறிவது எவ்வாறு? தோட்டக்கலைத்துறை மாணவிகள் செயல் விளக்கம்


UPDATED : பிப் 05, 2026 12:16 PM

ADDED : பிப் 05, 2026 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2026 12:16 PM ADDED : பிப் 05, 2026 12:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: கறவை மாடுகளுக்கு ஏற்படும், மடி வீக்கம் நோய் தடுப்பு மற்றும் எளிய மருத்துவ முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மாணவிகள், செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை பல்கலையில் தோட்டக்கலை துறையில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ஜமுனா, ஜெயஸ்ரீ, ஜென்சி ஹெப்சிபா, காளீஸ்வரி, காஞ்சனா, கண்மணி, கீர்த்தனா, கேசவினோதினி ஆகியோர் சிறுமுகையில் முகாம் அமைத்துள்ளனர்.

இவர்கள் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களுக்குச் சென்று, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டறிந்து, அதை குறிப்பெடுத்து வருகின்றனர்.

காரமடை அடுத்த வெள்ளியங்காடு கிராமத்தில், கறவை மாடுகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

நான்கு தடுப்புகள் இருக்கும் பிளாஸ்டிக் தட்டில், மாட்டின் நான்கு காம்புகளில் இருந்து, தனித்தனியாக சம அளவு பாலை எடுக்க வேண்டும். அதே அளவு சி.எம்.டி., சோதனை கரைசலை சேர்க்க வேண்டும். தட்டை வட்ட வடிவில், பாலை நன்கு கலக்க வேண்டும். பால் கட்டியாகி வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

மடி நோய் உள்ள மாட்டின் பாலில் சோமாட்டிக் செல்கள், வெள்ளை ரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்த சோதனையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் பாலில் உள்ள சோமாட்டிக் செல்களில் டி.என்.ஏ., உடன் வினை செல்கள் அதிகம் இருந்தால், இந்த வினை காரணமாக பால் பிசுபிசுப்பாக அல்லது ஜெல் போன்று மாறும்.

ஜெல் எவ்வளவு அதிகம் உருவாகிறதோ, அவ்வளவு அதிகமாக மடி நோய் உள்ளது என்ற உறுதிப்படுத்தலாம். பால் தண்ணீர் போல் இருந்தால், மடி நோய் இல்லை என அறியலாம்.

இவ்வாறு, மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us