sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெங்., தமிழ் சங்கம் சார்பில் நடந்த இனிமை தமிழ் வகுப்பு நிறைவு

/

பெங்., தமிழ் சங்கம் சார்பில் நடந்த இனிமை தமிழ் வகுப்பு நிறைவு

பெங்., தமிழ் சங்கம் சார்பில் நடந்த இனிமை தமிழ் வகுப்பு நிறைவு

பெங்., தமிழ் சங்கம் சார்பில் நடந்த இனிமை தமிழ் வகுப்பு நிறைவு


UPDATED : பிப் 04, 2026 01:31 PM

ADDED : பிப் 04, 2026 01:33 PM

Google News

UPDATED : பிப் 04, 2026 01:31 PM ADDED : பிப் 04, 2026 01:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் அசோக்நகரில் நடந்த, இனிமை தமிழ் வகுப்பு நிறைவு பெற்றது. தமிழ் எழுத, படிக்க கற்று கொண்ட 45 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு, பெங்களூரில் ஏராளமான தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன.

இக்குடும்பங்களை சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு தமிழ் பேச தெரிந்தாலும் எழுத, படிக்க தெரிவது இல்லை.

ஆர்வம் இருப்போர் தமிழ் எழுத, படிக்க கற்று கொள்ளும் வகையில், பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில், 'இனிமை தமிழ் வகுப்பு' என்ற பெயரில், தமிழ் எழுத, படிக்க கற்று கொடுக்கப்படுகிறது.

அசோக்நகர், எம்.ஜி.ரோடு, சாம்ராஜ்பேட், காக்ஸ் டவுன் என்று நான்கு இடங்களில், பயிற்சி அளிக்கப்படுகிறது. அசோக்நகரில் உள்ள வெஸ்லி தமிழ் தேவாலயத்தில் கடந்த 20 வாரங்களுக்கு முன், பயிற்சி துவங்கப்பட்டது.

முதலில் 65 பேர் வகுப்பில் சேர்ந்தனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை, வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஆசிரியை வித்யா சரஸ்வதி வகுப்பு எடுத்தார். சில காரணங்களுக்காக 20 பேர் வகுப்பில் இருந்து பாதியில் விலகிய நிலையில், சிறுவர், சிறுமியர் 25 பேர், பெரியவர்கள் 20 பேர் என 45 பேர் 20 வார வகுப்பை முழுமையாக முடித்து, தற்போது தமிழ் எழுத, படிக்க கற்று உள்ளனர். இவர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெங்களூரு தமிழ்ச்சங்க செயலர் மு.சம்பத், முன்னாள் செயலர் ராமசுப்பிரமணியன், இனிமை தமிழ் வகுப்பு பொறுப்பாளர் அமுதபாண்டியன், இனிமை தமிழ் வகுப்பு அலுவலக பொறுப்பாளர்கள் ராஜசேகர், வசந்த் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். ஆசிரியை வித்யா சரஸ்வதியும் கவுரவிக்கப்பட்டார். தேவாலய செயலர் ராஜன் ஆபிரகாம் நன்றி கூறினார்.

தமிழ் கற்று கொள்ள விரும்புவோர் அமுதபாண்டியனை அழைக்கலாம்.

தொடர்புக்கு: 94482 01837.






      Dinamalar
      Follow us