sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டில்லி ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

/

டில்லி ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

டில்லி ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

டில்லி ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்


UPDATED : பிப் 14, 2026 11:00 AM

ADDED : பிப் 14, 2026 11:03 AM

Google News

UPDATED : பிப் 14, 2026 11:00 AM ADDED : பிப் 14, 2026 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
டில்லியில் வரும் 16 முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ள, 'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் சம்மிட் 2026' என்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் பிரேசில் அதிபர் லுாலா டா சில்வாவும் பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் சம்மிட் 2026' மாநாடு, வரும் 16 முதல் 20 வரை டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், 19ல் பிரதமர் மோடி முக்கிய அமர்வில் உரையாற்ற உள்ளார்.

'கூகுள்' தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனர் சாம் ஆல்ட்மேன், 'என்விடியா' தலைவர் ஜென்சன் ஹுவாங், 'டீப் மைண்ட்' தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், 'மைக்ரோசாப்ட்' தலைவர் பிராட் ஸ்மித் உள்ளிட்ட பல உலக தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

'உலகம், மக்கள், வளர்ச்சி' என்ற மூன்று தளங்களின் அடிப்படையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறன் மேம்பாடு, சமூக உள்ளடக்கம், ஏ.ஐ., பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட ஏழு துறைகள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதிபர் லுாலா டா சில்டாவும் பங்கேற்க உள்ளதாக நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.







      Dinamalar
      Follow us