கோச்சிங் மையங்களின் தரம் பி.ஐ.எஸ்., சார்பில் கருத்தரங்கு
கோச்சிங் மையங்களின் தரம் பி.ஐ.எஸ்., சார்பில் கருத்தரங்கு
UPDATED : பிப் 25, 2026 10:58 AM
ADDED : பிப் 25, 2026 10:58 AM
கோவை:
கோச்சிங் மையங்களுக்கு தர நிர்ணயம் செய்வது குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில், கோச்சிங் மைய உரிமையாளர்கள், நிர்வாகிகள், கல்விப்பிரிவு அலுவலர்கள், ஆன்லைன் கோச்சிங் மையங்கள், பயிற்றுநர்கள், பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோச்சிங், ஆன்லைன் கோச்சிங் மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய தர நிர்ணய முறைகள், பி.ஐ.எஸ்., தரச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கினர்.
பயிற்சி மையங்களில் இருக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், செயல்பாட்டு நடைமுறைகள், தகுதி, பயிற்றுநர்களின் பொறுப்பு, பாடத்திட்ட வடிவமைப்பு, கற்றல் மதிப்பீடு, பராமரிப்புகள், பாதுகாப்பு என பல்வேறு நிலைகளில் பேணப்பட வேண்டிய தரம் குறித்து விளக்கப்பட்டது.
பி.ஐ.எஸ்., புதுடில்லி தலைமையக இணை இயக்குநர் ஆதித்ய பட், கோவை கிளை தலைவர் பவானி, கே.பி.ஆர்., இன்ஜி., கல்லூரி முதல்வர் தேவி பிரியா, பி.ஐ.எஸ்., விஞ்ஞானிகள் சுரேஷ்குமார், வினித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

