UPDATED : பிப் 25, 2026 10:55 AM
ADDED : பிப் 25, 2026 10:58 AM
பந்தலுார்:
பந்தலுார் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
பந்தலுார் தாளூரில் செயல்படும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உள்ள நலந்தா அரங்கில், 'நுால் காஞ்சி இலக்கிய பேரவை' மற்றும் ஓவியா பதிப்பகம் இணைந்து, 49வது பன்னாட்டு கருத்தரங்கை நடத்தின.
கல்லுாரி முதல்வர் முனைவர் பால சண்முக தேவி வரவேற்றார். செயலாளர் முனைவர் ராசித்கஸ்சாலி முன்னிலை வகித்தார். காந்திகிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநாதம் தலைமை வகித்து, நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், 'தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சிந்தனைகள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அத்துடன் தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கை நேயம், மனிதன் உறவு உள்ளிட்ட பல்வேறு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திருமலை, தமிழ் துறையின் எதிர்கால நோக்கங்கள் குறித்து பேசினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் கலா, சிங்கப்பூரை சேர்ந்த பேராசிரியர் முகமது சலீம் ஆகியோர், 'உலகளாவிய பார்வையில், தமிழ் இலக்கிய சூழலியல் சிந்தனைகள்' குறித்து பேசினர்.
கல்லூரி பேராசிரியர் மோகன்பாபு, மேலாளர் உமர் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

