UPDATED : பிப் 25, 2026 10:49 AM
ADDED : பிப் 25, 2026 10:58 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 3ல், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 3ம் தேதி, காஞ்சிபும் கலெக்டர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 09:30 மணிக்கு நடைபெற உள்ளது.
தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 044 - 2723 7124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

