வளர்ந்த இந்தியா இலக்கு மகளிர் பங்களித்தால் சிறப்பு
வளர்ந்த இந்தியா இலக்கு மகளிர் பங்களித்தால் சிறப்பு
UPDATED : மார் 03, 2026 11:19 AM
ADDED : மார் 03, 2026 11:20 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையம் சார்பில், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
'அறிவியலில் பெண்கள்: வளர்ந்த பாரதத்தை ஊக்குவிப்பது' என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு சொற்பொழிவு, கட்டுரை எழுதுதல், அறிவியல் வினாடி வினா, கேன்வாஸ் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 9 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு அவசியம் என, விழாவில் வலியுறுத்தப்பட்டது.
நிறைவு விழாவில், மாநில வனப்பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் அறிவியல் அறிவின் பங்கை வலியுறுத்தி பேசினார்.
பல்கலை தோட்டக்கலை இயக்குனர் வெங்கடேசன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

