UPDATED : மார் 11, 2026 12:24 PM
ADDED : மார் 11, 2026 12:33 PM
கள்ளக்குறிச்சி:
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 105 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில், டாடா எலக்டரானிக்ஸ், பாக்ஸ்கான், எஸ்.எஸ்.பி., மற்றும் பல்வேறு நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்று மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். அதில் தேர்வான மாணவ மாணவிகள் 105 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை தமிழ் துறை உதவி பேராசிரியை அனுசுயா தொகுத்து வழங்கினார்.
இதில் கல்லுாரி வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், செந்தில்குமார், மணிகண்டன் உட்பட கல்லுாரி துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

