தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு தேர்வு எழுதும் 20,189 மாணவ, மாணவியர்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் 20,189 மாணவ, மாணவியர்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் 20,189 மாணவ, மாணவியர்


UPDATED : மார் 11, 2026 12:21 PM

ADDED : மார் 11, 2026 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 12:21 PM ADDED : மார் 11, 2026 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 20,189 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில், 225 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 88 தனியார் பள்ளிகள் என, 318 உயர்நிலை பள்ளிகள் உள்ளன.

இதில், 94 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வில், 9,677 மாணவியர், 10,512 மாணவர் என, 20,189 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். சி.இ.ஓ., ஜோதிசந்திரா மேற்பார்வையில் அடங்கிய, 140 பறக்கும் படை குழுவினர் தேர்வு கண்காணிப்பு பணியிலும், 2,250 ஆசிரியர்கள் தேர்வு பணியிலும் ஈடுபட உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இறுதி நேர பதற்றத்தை தவிர்க்க, மாணவர்கள் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வுக்கு வரும் முன், ஹால் டிக்கெட் மற்றும் தேர்வுக்கான உபகரணங்களை சரி பார்த்து கொண்டு வர வேண்டும் என, தேர்வு மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us