தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரு குழும நிறுவனங்களில் தலைமைப்பண்பு உச்சி மாநாடு

நேரு குழும நிறுவனங்களில் தலைமைப்பண்பு உச்சி மாநாடு

நேரு குழும நிறுவனங்களில் தலைமைப்பண்பு உச்சி மாநாடு


UPDATED : மார் 13, 2026 04:24 PM

ADDED : மார் 13, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2026 04:24 PM ADDED : மார் 13, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நேரு குழும நிறுவனங்கள் மற்றும் 'ரோட்டரி திஷா - 2026' இணைந்து, நேரு கல்வி நிறுவனங்களில், தலைமைத்துவ உச்சி மாநாடு நடத்தியது.

சிறப்பு விருந்தினர், எழுத்தாளர் ஷிவ்கேரா பேசுகையில், “வாழ்க்கையில் வெற்றி பெற, நேர்மறை அணுகுமுறை, நல்ல குணநலன், தலைமைத்துவ திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். இது குழு உணர்வு, பிறரின் கருத்துக்களை மதித்தல், தனித்துவத்தை அடையாளம் காட்ட உதவும். நேர்மறை சிந்தனை, ஒழுக்கம் போன்ற உயரிய பண்புகளே, மதிப்பெண்களை தாண்டி, தனிநபரை அடையாளப்படுத்துபவை. இதை வளர்த்து கொள்வது அவசியம்,” என்றார்.

மாநாட்டில், தமிழகத்தில் உள்ள நேரு கல்வி குழு நிறுவனங்களை சேர்ந்த, 11 மாணவர்களுக்கு, சிறந்த திறமையாளர் விருது வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில், பி.கே.தாஸ் பல்கலை பதிவாளர் அனிருதன் வரவேற்றார். நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குனர் நாகராஜா, 'டீன்' பாலாஜி மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் ஆளுநர் குரியாச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us