கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள் துவக்கம்
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள் துவக்கம்
UPDATED : மார் 18, 2026 05:23 PM
ADDED : மார் 18, 2026 05:26 PM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் துறைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், அனைத்து துறைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
போட்டிகளை கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சரவணன் வரவேற்றார். ஒரு வாரம் நடக்கும் போட்டிகளில் கல்லுாரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
போட்டிகளின் நடுவர்களாக கல்லுாரி ஆசிரியர்கள் கோவிந்தராஜன், ரவி செயல்படுகின்றனர்.
கல்லுாரி துறை தலைவர்கள் கிருஷ்ணகுமார், மோட்ச ஆனந்தன், முருகானந்தன், உமா, வீரலட்சுமி, சித்ரா, நுாலகர் அசோக்குமார், கல்லுாரி கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் அனைத்து பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

