sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கனவுகளுக்கு பாதை அமைக்கும் கதிர் கல்வி நிறுவனங்கள்

/

கனவுகளுக்கு பாதை அமைக்கும் கதிர் கல்வி நிறுவனங்கள்

கனவுகளுக்கு பாதை அமைக்கும் கதிர் கல்வி நிறுவனங்கள்

கனவுகளுக்கு பாதை அமைக்கும் கதிர் கல்வி நிறுவனங்கள்


UPDATED : மார் 27, 2026 06:20 PM

ADDED : மார் 27, 2026 06:24 PM

Google News

UPDATED : மார் 27, 2026 06:20 PM ADDED : மார் 27, 2026 06:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2008ல் நிறுவப்பட்ட கதிர் கல்வி நிறுவனங்கள், நகர, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியின் வாயிலாக எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சக்தியாகத் திகழ்கிறது.

நிறுவனர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர் ஆகியோரின் வழிகாட்டலில், 17 ஆண்டுகளாக இன்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், மேலாண்மைக் கல்லூரிகளில் சிறந்து விளங்குகிறது.

சிறந்த கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு, லமிகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வேலைவாய்ப்பு



கல்வியை வேலைவாய்ப்புடன் இணைப்பதில், கதிர் கல்வி நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. ஏ.ஐ., டேட்டா சயின்ஸ், எம்.எல்., போன்ற, எதிர்கால தொழில்நுட்பங்களுக்கே பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கேற்ப தயார்படுத்தப்படுகின்றனர்.

தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள கதிர் இன்ஜி., கல்லூரி, பாடத்திட்டங்களை காலத்துக்கேற்ப அப்டேட் செய்வதால், மாணவர்கள் உலகளாவிய தொழில்நுட்ப அறிவைப் பெறுகின்றனர்.

சிறந்த உள்கட்டமைப்பு நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, புதுமைப் படைப்பு மையங்கள் என, அதிநவீன கற்றல் சூழலை கதிர் வழங்குகிறது. இன்ஜி., மட்டுமல்லாது, கலை அறிவியல் கல்லூரி, கல்விக் கல்லூரி ஆகியவையும் நடைமுறைப் பயிற்சி, தொழில்சார் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

சமூக பொறுப்பு


கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதிச்சுமையைப் போக்க, நியாயமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

லமிகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது.

நீலாம்பூரில் அமைந்துள்ள இவ்வளாகம், அண்டை மாவட்டங்களில் இருந்தும் எளிதில் அணுகும் வகையில் உள்ளது.

தன்னாட்சி அந்தஸ்து கொண்ட கதிர் இன்ஜி., கல்லூரி, தமிழகத்தின் விரும்பப்படும் இன்ஜி., கல்லூரியாக விளங்குகிறது.

பாரதியார் பல்கலையுடன் இணைக்கப்பட்ட கதிர் கலை அறவியில் கல்லூரி, தொழில்சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

NCTE அங்கீகாரம் பெற்ற கதிர் கல்விக் கல்லூரி, மதிப்பீட்டுடன் கூடிய ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது.

மாணவர்களின் லட்சியப் பயணம், கதிர் கல்வி நிறுவனங்களில் தொடங்கட்டும்!






      Dinamalar
      Follow us