UPDATED : ஏப் 22, 2026 02:26 PM
ADDED : ஏப் 22, 2026 02:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:
ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் சஞ்சய் முதலிடமும், மாணவி தரணி இரண்டாம் இடமும், கனிமொழி மூன்றாம் இடமும் பிடித்தனர்.
மேலும், 400க்கும் மேல் 7 பேர், 375க்கு மேல் 9 பேர், 350க்கு மேல் 18 பேர் எடுத்து சாதனை படைத்துள்ளனர். முதல் ஐந்து மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் சண்முகம், பள்ளி முதன்மை இயக்குநர் வனஜா ஆகியோர் கவுரவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் சண்முகம், முதல்வர் ராஜலட்சுமி பாராட்டினர்.

