ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
UPDATED : மே 31, 2026 11:57 AM
ADDED : மே 31, 2026 12:00 PM
ஈரோடு:
கோபி, ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை - டெக் பொறியியல் கல்லூரியில், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக சத்யபிரகாஷ் சேகரன், இயக்குனர் ஜிப்ட்டி சொலுஷன்ஸ் சென்னை, உதயசங்கர், இயக்குனர், நாஸ்காம் டேலண்ட் கவுன்சில், இணை நிறுவனர், அறக்கட்டளை சென்னை கலந்து கொண்டனர்.
விழாவில் பவானி எம்.எல்.ஏ., மற்றும் கல்லுாரி செயலாளர் கருப்பணன், தலைவர் வெங்கடாச்சலம், துணை செயலாளர் ஜி.பி.கெட்டி முத்து, அறங்காவலர்கள் கே.ஆர்.கவியரசு, தலைமை நிர்வாக அதிகாரி கவுதம், துணை முதல்வர், புல முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
விழாவில், 240 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. பொறியியல் கல்லுாரி முதல்வர் முனைவர் தங்கவேல் தலைமையில் விழா நடந்தது.
