UPDATED : ஜூன் 16, 2026 05:38 PM
ADDED : ஜூன் 16, 2026 05:39 PM
மதுரை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை முழுமையாக்கும் பணியின் 2ம் கட்ட செயல்பாடுகள் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக, மாநில, மாவட்ட, வட்டார வளபயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தற்காலிக பணியிடங்களாக தலா ஒரு மாநில வளப்பயிற்றுனர், மாவட்ட வளப்பயிற்றுனர். வட்டார வளப்பயிற்றுனர் (ஒன்றியத்திற்கு ஒருவர்) தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநில வளப்பயிற்றுனர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், மாவட்ட வளப்பயிற்றுனருக்கு ரூ.18 ஆயிரம், வட்டார வளப்பயிற்றுனர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வழங்கப்படும்.
மாநில வளப்பயிற்றுனர்களுக்கு பெண்கள், சுயஉதவி குழுவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமூககல்வி, சமூக அறிவியல், ஊரக வளர்ச்சி, பெண்கள் கல்வி அல்லது சமூக பணியிடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம், பத்து ஆண்டு அனுபவம், வயது 30 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.
மாவட்ட வளப்பயிற்றுனருக்கு மேற்கண்ட தகுதிகளுடன் 4 ஆண்டு அனுபவம் போதுமானது. வட்டார வளப்பயிற்றுனருக்கு மேற்கண்ட தகுதிகளுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 3 ஆண்டு அனுபவம் போதுமானது.
தமிழ், ஆங்கிலத்தில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். அலைபேசி, கணினி, இணைய பயன்படுத்தலில் போதிய அறிவு அவசியம். விருப்பமுள்ளோர் ஜூன் 29 க்குள் விண்ணப்பம், தகுதி குறித்த சுயசான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவை 24 மாத தற்காலிக பணியிடங்களாகும். விண்ணப்பத்தை, 'திட்ட இயக்குனர் / இணை இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), புதுநத்தம் ரோடு, ரிசர்வ்லைன் பஸ்ஸ்டாப் அருகே, மதுரை - 14' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு http://tncdw.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
