தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அஞ்சல் அலுவலக பணிகளை பள்ளி மாணவர்கள் பார்வை

அஞ்சல் அலுவலக பணிகளை பள்ளி மாணவர்கள் பார்வை

அஞ்சல் அலுவலக பணிகளை பள்ளி மாணவர்கள் பார்வை


UPDATED : ஜூன் 22, 2026 06:32 PM

ADDED : ஜூன் 22, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 06:32 PM ADDED : ஜூன் 22, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாசூர்:
பாசூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், அஞ்சல் அலுவலகத்திற்கு களப் பயணம் சென்று, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.

களப்பயணத்தை பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி துவக்கி வைத்தார். ஆசிரியை பிரபாவதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் துரைசாமி நோக்கவுரையாற்றினார். பள்ளியின் 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பாசூூர் அஞ்சல் அலுவலகத்தில் சென்று அலுவலக செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

அஞ்சல் அனுப்புவது, பணப் பறிமாற்றம், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துவது, பார்சல் அனுப்புவது, அஞ்சல் வில்லைகள், பதிவு அஞ்சல், சாதாரண அஞ்சல் உள்ளிட்ட அஞ்சல சேவைகள் குறித்து அஞ்சலக அதிகாரி ராஜி, உதவியாளர் பார்த்தசாரதி ஆகியோர் விளக்கினர்.

ஆசிரியர்கள் உமாமகேஷ்வரி, பாக்கியலட்சுமி மற்றும் அஞ்சல ஊழியர்கள் உடனிருந்தனர். மாணவர் சுதிஷ் நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us