தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/499 மாணவ மாணவியர் நீட் மறுதேர்வில் ஆப்சென்ட்

499 மாணவ மாணவியர் நீட் மறுதேர்வில் ஆப்சென்ட்

499 மாணவ மாணவியர் நீட் மறுதேர்வில் ஆப்சென்ட்


UPDATED : ஜூன் 22, 2026 06:30 PM

ADDED : ஜூன் 22, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 06:30 PM ADDED : ஜூன் 22, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த 'நீட்' மறுதேர்வில், 499 மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லை.

மருத்துவ கல்வி சேர்க்கைக்கா ன 'நீட்' தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர் வு முகமை அறிவித்தது.

அதன்படி, ரத்து செய்யப்பட்ட தேர்விற்கான மறுதேர்வு நேற்று நாடு முழுதும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்விற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; பிள்ளையார்பாளையம் அரசு சி.எம்.எஸ்., மேல்நிலைப் பள்ளி; வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; குன்றத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; ஸ்ரீபெரும்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என, ஐந்து தேர்வு மையங்களில் நேற்று 'நீட்' தேர்வு நடந்தது.

இதில், தேர்வு எழுத மொத்தம் 2,123 மாணவ மாணவியருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேர்வு நடைபெற்றது.

முன்னதாக, தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ மாணவியர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஹால் டிக்கெட் பெற்றிருந்த 2,123 பேரில், நேற்று 1,624 மாணவ மாணவியர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 499 பேர் தேர்வு எழுத வரவில்லை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us