குழந்தைகள் உதவி மையத்தில் மேற்பார்வை பணிக்கு அழைப்பு
குழந்தைகள் உதவி மையத்தில் மேற்பார்வை பணிக்கு அழைப்பு
UPDATED : ஜூலை 06, 2026 10:09 AM
ADDED : ஜூலை 06, 2026 10:09 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில், குழந்தைகள் உதவி மையத்தில், மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம்:
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் உதவி மையம், ரயில் நிலைய குழந்தைகள் உதவி மையம் மற்றும் வழக்கு பணியாளர் என தலா ஒரு பணியிடம் என, மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், வரும் 20ம் தேதி மாலை 05:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு, 63826 13182 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை http:chengalpattu.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
