UPDATED : ஜூலை 07, 2026 06:05 PM
ADDED : ஜூலை 07, 2026 06:06 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான ஆயத்த பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான, 2026 - 27ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஆயத்த பொதுக்குழு கூட்டம், பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரசேன் தலைமை வகித்தார். தொடர்ந்து, குறுமயை அளவிலான போட்டிகள் எந்தந்த பள்ளிகள் பொறுப்பேற்று நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.
அதில், கோட்டூர் குறுமைய அளவிலான போட்டிகளை வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியும், கிழக்கு குறுமைய போட்டிகளை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மேற்கு குறுமைய போட்டிகளை லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மற்றும் மதுக்கரை குறுமைய போட்டிகளை கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் நடத்த முடிவு செய்யப்பட்டதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், உடற்கல்வி இயக்குனர்கள் கவின், செந்தில்குமார், கல்வி மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியயர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ராஜ் நன்றி கூறினார்.
