UPDATED : ஜூலை 20, 2026 03:54 PM
ADDED : ஜூலை 20, 2026 03:56 PM
சென்னை:
மாநில கபடி போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
துாத்துக்குடி மாவட்டம் குளத்துாரில், காமராஜர் விளையாட்டு அகாடமி சார்பில், மாநில கபடி போட்டி நேற்று நிறைவடைந்தது.
போட்டியில், 16 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காலிறுதிப் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, கோவை கற்பகம் பல்கலை அணியை, 29 - 12 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில், பலம் வாய்ந்த வருமான வரித்துறை அணியை, எஸ்.ஆர்.எம்., வீரர்கள் அபார ஆட்டத்தின் மூலம் 41 - 21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தனர்.
இறுதிப் போட்டியில், தஞ்சை பிரிஸ்ட் பல்கலை அணியை 40 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றனர்.
தொடரில் சிறப்பாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., மாணவர் எஸ்.அபிநந்த் 'சிறந்த வீரர்' விருதை வென்று அசத்தினார்.
