தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு


UPDATED : ஜூலை 23, 2026 04:09 PM

ADDED : ஜூலை 23, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 04:09 PM ADDED : ஜூலை 23, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
'எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், எஸ்.சி., எஸ்.டி., கிறிஸ்தவ மதம் மாறிய எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், https://umisdashboard.tnega.org என்ற இணையதளத்தில் கல்லுாரி மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

https://emis.tnschools.gov.in/auth/login?returnUrl=%2Fdashboard என்ற இணையதளத்தின் வாயிலாக பள்ளி மாணவ, மாணவியர் விபரங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெற்றோர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும்.

இது தொடர்பாக கரூர் கலெக்டர் அலுவலகம் அறை எண், 114ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-599-7638 என்ற கட்டணமில்லா சேவை எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us