UPDATED : செப் 08, 2026 07:26 PM
ADDED : செப் 08, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
கோவை:
கற்பகம் பல்கலையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. 20க்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 600க்கு அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் கற்பகம் பல்கலை முதலிடமும், இளந்தளிர் அணி இரண்டாம் இடமும் வென்றன.
ஜூனியர் பிரிவில் இளந்தளிர் முதலிடமும், ஆர்.கே. சிலம்பம் இரண்டாம் இடம், 'சப் ஜூனியர்' பிரிவில் சிலம்பாலயா முதலிடமும், புகழ் சிலம்பம் இரண்டாம் இடமும், 'பிரீ சப் ஜூனியர்' பிரிவில் இந்திய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு நல அறக்கட்டளை முதலிடமும், பி.எம்.ஜி., பள்ளி இரண்டாம் இடமும் வென்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலை பதிவாளர் பிரதீப் பரிசுகள் வழங்கினார்.
