தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுழற்சி முறையை பின்பற்றுங்க: பாரதியார் பல்கலைக்கு வலியுறுத்தல்

சுழற்சி முறையை பின்பற்றுங்க: பாரதியார் பல்கலைக்கு வலியுறுத்தல்

சுழற்சி முறையை பின்பற்றுங்க: பாரதியார் பல்கலைக்கு வலியுறுத்தல்


UPDATED : அக் 05, 2026 02:57 PM

ADDED : அக் 05, 2026 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:57 PM ADDED : அக் 05, 2026 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலை ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தாமதிக்கும் பல்கலைக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் விடுப்பில் இருக்கும் போது, அரசு விதிப்படி சீனியர் பேராசிரியரை பொறுப்பு பதிவாளராக நியமிக்கவும்; வருகை பதிவேடு முறையை சரியாக பின்பற்ற வேண்டும். பல்கலையில், 430 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளது.

60 பணியாளர்கள் மட்டும் பணிபுரிவதால், நிதி மற்றும் நிர்வாகப் பிரிவுகளுக்கு பொறுப்பு பேராசிரியர்கள் நியமிப்பது. ஒரே பிரிவில் 10 முதல் 20 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை சுழற்சி முறையில் இடமாற்றுதல்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இது பற்றி சங்கத்தினர் கூறியதாவது: 2024ல் திறந்த தாவரவியல் துறை கட்டடத்துக்கு ஆய்வக உபகரணங்களை மாற்றுவதோடு, இணையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்.

ஜூலை முதல் மூடிய பல்கலை உணவகத்தின் பின்புறம் அனுமதியின்றி சமையல் நடக்கிறது. ஒப்பந்ததாரர் வளாகத்தை பயன்படுத்துவது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us