தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : அக் 05, 2026 02:58 PM

ADDED : அக் 05, 2026 02:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:58 PM ADDED : அக் 05, 2026 02:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1978 - 79ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு படித்த, 35க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டனர்.

பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதில் சிலர் மட்டும் பள்ளியில் ஆண்டுதோறும் சந்தித்து வந்தனர். 47 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட அனைவரும், தங்களது குடும்பத்தினரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தனர். கடைசியில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த முன்னாள் மாணவர்கள் மூலமாக, பள்ளிக்கு தேவையான உதவிகள் ஏற்கனவே செய்யப்படுகின்றன. மேற்கொண்டு உதவிகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்களில் ஒருவரான முத்துலட்சுமி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us