தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் மாணவர் தனித்திறனில் கவனம்

சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் மாணவர் தனித்திறனில் கவனம்

சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் மாணவர் தனித்திறனில் கவனம்


UPDATED : அக் 13, 2026 09:32 PM

ADDED : அக் 13, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 09:32 PM ADDED : அக் 13, 2026 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூரில், சுப்பையா குழுமத்தின் ஒரு பகுதியாக 2012 ல் துவங்கப்பட்டது சுப்பையா சென்ட்ரல் ஸ்கூல். குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளி சி.பி.எஸ்.இ., பள்ளி. பிரி கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழி இரு பாலர் படிக்கும் பள்ளியாக செயல்படுகிறது.

கற்றல் திட்டமானது குழந்தைகளின் கற்கும் திறன், எழுத்தறிவு மற்றும் பொது அறிவு திறன் வளர்ப்பை நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு வகுப்புக்கும் மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ற, மன அழுத்தம் இன்றி நெருக்கடியற்ற மூச்சுமுட்டும் பணிச்சுமை இல்லாத கற்பிக்கும் முறை இதன் சிறப்பம்சம்.

ஹவுஸ் மற்றும் கிளப் செயல்பாடுகள் மாணவர்களுக்கு வெற்றி தோல்வி குறித்த புரிதலை ஏற்படுத்தும். அதேபோல் மாணவர்கள் தனித்திறன் கண்டறிந்து அதை மேம்படுத்தும் விதமான பயிற்சிகள், போட்டிகளில் பங்கேற்க பயிற்சி; உளவியல் ரீதியான ஆலோசனை என வழங்கப்படுகிறது.

பாடங்களைப்போல் உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான விளையாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பங்கேற்போர் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

அறிவுத் திறன் வளர்க்க சிறந்த நுாலகம், மேட்ரிக்ஸ் கணினி ஆய்வகம், ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், ராமானுஜன் கணித ஆய்வகம், திறன் வளர்ப்புக்கான ஒலிம்பியாட் ASSET, CARES, QUIZ, CBSE போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு 0421-3550103, 224 5252, 89408 82236 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us