தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் மொபைல் போன் கட்டாயம் தடை வேண்டும்

பள்ளிகளில் மொபைல் போன் கட்டாயம் தடை வேண்டும்

பள்ளிகளில் மொபைல் போன் கட்டாயம் தடை வேண்டும்


UPDATED : நவ 05, 2026 08:26 PM

ADDED : நவ 05, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 08:26 PM ADDED : நவ 05, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிகளில் மாணவர்களிடையே மொபைல் போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்கள் பதிவிடும் மோகம் அதிகரித்து வருவதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தடம் மாறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தீய பழக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்க கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதில் ஒன்றாக ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பள்ளி வளாகங்களில் வகுப்பு நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவ மாணவியரை பொறுத்தவரை பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வர தடை உள்ளது. இதற்கு மாற்றாக மாணவர்கள் தற்போது மொபைல் போனை 'சைலன்ட் மோடு' நிலையில் வைத்து தங்களது புத்தகப்பையில் வைத்து பள்ளிக்கு எடுத்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் கழிவறையில் தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது. மாணவர்களை தாக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்கள் பதிவிட்டனர்.

எனவே மாணவர்கள் பள்ளிகளுக்கு மொபைல் போன் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us