UPDATED : நவ 07, 2026 01:37 AM
ADDED : நவ 07, 2026 01:37 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்கு பைக் பழுது பார்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நஞ்சப்பா பள்ளியில், பிளஸ் 1 அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பு சிறப்பு பாடமாக உள்ளது.
இதற்காக நேரடி பயிற்சி பெறும் வகையில் இன்டெர்ன்ஷிப் பயிற்சி (பயிற்சியுடன் கூடிய கல்வி) அளிக்கப்படுகிறது. அவ்வகையில், மாணவர்களுக்கு திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இரு சக்கர வாகன சர்வீஸ் சென்டரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு, 10 நாள் பொறுப்பாசிரியர் முன்னிலையில், சர்வீஸ் சென்டர் பொறுப்பாளர்கள் தொடர் பயிற்சி அளிக்கின்றனர்.
