UPDATED : நவ 22, 2026 07:14 PM
ADDED : நவ 22, 2026 07:15 PM
திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில், பட்டிமன்றம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயந்தி, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சங்கரன் வரவேற்றார்.
நவீன அறிவியல் சாதனங்களால் மனித குலத்திற்கு நன்மையா? தீமையா? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு ஆசிரியர் வில்வபதி நடுவராக செயல்பட்டார். நன்மையே தலைப்பில் ஆசிரியர்கள் பாரதி, புவனேஸ்வரி, மோனிஷா ஆகியோரும்; தீமையே என்ற தலைப்பில் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, சுமித்ரா, பாக்கியலட்சுமி ஆகியோர் வாதித்தனர்.
ஆசிரியர்கள் ரேவதி, ஞானவள்ளி, பர்கத்பானு, அன்பழகன், லோகியா பட்டேல், குமார், அருணாச்சலம், முருகேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
