தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவு மேற்பார்வை ஆசிரியரை ஈடுபடுத்த கூடாது

காலை உணவு மேற்பார்வை ஆசிரியரை ஈடுபடுத்த கூடாது

காலை உணவு மேற்பார்வை ஆசிரியரை ஈடுபடுத்த கூடாது


UPDATED : நவ 23, 2026 09:15 PM

ADDED : நவ 23, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 09:15 PM ADDED : நவ 23, 2026 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
அரசு, உதவிபெறும் பள்ளிகளில் செயல்படும் காலை உணவுத் திட்டம் மேற்பார்வை பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் இக்கூட்டணியின் 15வது அமைப்பு தேர்தல், புதிய நிர்வாகிகள் தேர்வு, நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. முருகன், ராமச்சந்திரன் தேர்தல் கமிஷனர்களாக செயல்பட்டனர்.

வட்டாரத் தலைவராக செல்வகுமார், செயலாளர் சுப்புலட்சுமி, பொருளாளர் காந்திபாய், துணை தலைவர்களாக வனிதா, பரமசிவம், சசிகலா, துணைச் செயலாளர்கள் சுமதி, சாந்தினி, டேனியல் துரைப்பாண்டியன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

அவர்கள் பேசுகையில், ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க குழு அமைக்க வேண்டும். சம்பள உயர்வு பெற முடியாமல் தவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தீர்வு காண வேண்டும். காலை உணவுத் திட்டத்தை மேற்பார்வையிட ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us