தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் கையில் சான்றிதழ் மாணவ, மாணவியர் பயணம்

முதல்வர் கையில் சான்றிதழ் மாணவ, மாணவியர் பயணம்

முதல்வர் கையில் சான்றிதழ் மாணவ, மாணவியர் பயணம்


UPDATED : நவ 24, 2026 11:40 AM

ADDED : நவ 24, 2026 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:40 AM ADDED : நவ 24, 2026 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
த.வெ.க., சார்பில் நடைபெறும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 48 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை த.வெ.க., வழங்கி வருகிறது. இரண்டாம் கட்ட விழா, 26, 27ம் தேதிகளில் சென்னை - நீலாங்கரையில் நடைபெறுகிறது.

இதில், 36 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்குகிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதிகளில் இருந்து தலா 6 பேர் வீதம் மொத்தம் 48 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை (25ம் தேதி) சென்னை புறப்படுகின்றனர். அவர்களுக்கான அடையாள அட்டைகளும், பெற்றோருக்கான அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us