தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு மாணவர் பட்டியல் பதிவேற்றும் அவகாசம் முடிகிறது

தேர்வு மாணவர் பட்டியல் பதிவேற்றும் அவகாசம் முடிகிறது

தேர்வு மாணவர் பட்டியல் பதிவேற்றும் அவகாசம் முடிகிறது


UPDATED : நவ 24, 2026 11:39 AM

ADDED : நவ 24, 2026 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:39 AM ADDED : நவ 24, 2026 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் இறுதிப் பட்டியலை நாளை (25ம் தேதி) மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு 2026 - 27ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி, ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அக். 14 முதல் 31ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோரின் விவரங்களை அக். 22 முதல் 31ம் தேதிக்குள்ளும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எந்த மாணவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, முதலில் நவ. 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர், இறுதி அவகாசமாக நவ. 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அக். மாத கணக்கெடுப்பின்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33 ஆயிரம் பேரும், பிளஸ் 2 பொதுத்தேர்வை 28 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக முதற்கட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதிக்கட்ட பட்டியலை தாமதமின்றி பதிவேற்றம் செய்ய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை உறுதியாக தெரியவரும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us